உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்கள் சார்பில் கல்லறை திருவிழா

Published On 2023-11-02 13:42 IST   |   Update On 2023-11-02 13:42:00 IST
  • நவம்பர் 2-ந்தேதி இறந்த தங்கள் முன்னோர்களின் ஆன்மா இளைப்பாறுதல் பெறவேண்டி கல்லறையில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
  • திண்டுக்கல்- திருச்சி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலி நடத்தி வழிபட்டனர்.

திண்டுக்கல்:

உலகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்த வர்களால் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் இறந்த தங்கள் முன்னோர்களின் ஆன்மா இளைப்பாறுதல் பெறவேண்டி கல்லறையில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

அதன்படி திண்டுக்கல்- திருச்சி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் நேற்றே கல்லறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட னர். அங்கிருந்த முட்செடி கள் மற்றும் புதர்களை அகற்றி கல்லறை களில் புதிய வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று காலை கல்லறைகளுக்கு பலூன்கள் கட்டி பறக்கவிட்டும், விதவிதமான அலங்காரம் செய்தும் பூக்களால் மாலை கள் சாற்றியும் அலங்கரித்த னர். அதன்பிறகு தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பங்குத்தந்தையர்கள் சார்பில் சிறப்பு திருப்பலியும் நடத்தப்பட்டது. இதேபோல் ஏ.வெள்ளோடு, சிறுநாய க்கன்பட்டி, ராமையன்பட்டி, மேற்குமரியநாதபுரம், சவேரியார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்த கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News