உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

தஞ்சை மாவட்டத்தில் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம்- கலெக்டர் தகவல்

Published On 2022-12-02 10:16 GMT   |   Update On 2022-12-02 10:16 GMT
  • ரூ.186.35 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்குதல்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 ன் கீழ் தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை மேம்படுத்திடும் நோக்குடன் மீன்வளம் தொடர்பான ரூ.186.35 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கீழ் காணும் திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம், புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம், சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்குதல் திட்டம் ஆகிய திட்டத்திற்கு பொதுப்பயனாளிக்கு 40 சதவீதம் மானியமும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.

மேற்கண்ட திட்டத்திற்கு மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் தஞ்சாவூர் கீழவாசல் எண்.873/4 அறிஞர் அண்ணா சாலை என்ற முகவரியில் இயங்கும் தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணபங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News