அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்வேளாண் பொருட்கள் ரூ.52.39 லட்சத்துக்கு விற்பனை
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்திவேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 16.06 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 310 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.15-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.09-க்கும், சராசரி விலையாக ரூ.25.45-க்கும் என மொத்தம் ரூ.35 ஆயிரத்து 791-க்கு விலை போனது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 115.02 குவிண்டால் எடை கொண்ட 238 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.81.99-க்கும், சராசரி விலையாக ரூ.82.50-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.46-க்கும், சராசரி விலையாக ரூ.75.79-க்கும் என மொத்தம் ரூ.8லட்சத்து 57ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.
எள்
அதேபோல் 184.91 குவிண்டால் எடை கொண்ட 247 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.167.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.148.99-க்கும், சராசரி விலையாக ரூ.162.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.166.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.148.99-க்கும், சராசரி விலையாக ரூ.157.69-க்கும் என மொத்தம் ரூ.28லட்சத்து 80ஆயிரத்து 116-க்கு விற்பனையானது.
நிலக்கடலை காய்
அதேபோல் 195.81 குவிண்டால் எடை கொண்ட 637 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.75க்கும், சராசரி விலையாக ரூ.78.50-க்கும் என மொத்தம் ரூ.14 லட்சத்து 65 ஆயிரத்து 739க்கு விற்பனையானது.
இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.52லட்சத்து 39 ஆயிரத்து 410க்கு விற்பனையானது.