உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு-அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-03-30 11:13 GMT   |   Update On 2023-03-30 11:13 GMT
  • வரதப்பன் குட்டையில் நூறு நாள் திட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது.
  • ஆக்கிரமிப்பு அரசு நிலத்தில் கட்டப்பட்டு உள்ள சுற்றுச்சு வரை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த உளுந்தை ஊராட்சியில் ரூ.1 கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலம் தனியார் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதால் அருகில் உள்ள வரதப்பன் குட்டையில் நூறு நாள் திட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், உளுந்தை கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அரசு நிலம் தொடர்பாக அதிரடி ஆய்வு செய்தனர்.

அப்போது அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து உடனடியாக ஆக்கிரமிப்பு அரசு நிலத்தில் கட்டப்பட்டு உள்ள சுற்றுச்சு வரை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும். மேலும் வரதப்பன் குட்டைக்கு பொதுமக்கள் வரும் வகையில் பாதை அமைக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News