உள்ளூர் செய்திகள்

தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ்.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சுங்க வரி செலுத்தாத அரசு பஸ் தடுத்து நிறுத்தம்: நடுவழியில் இறக்கி விட்டதால் பயணிகள் அவதி

Published On 2023-10-05 13:07 IST   |   Update On 2023-10-05 13:07:00 IST
  • பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.
  • ெரயிலை பிடிக்க வேண்டும் என கூறி டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்:

சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பஸ் சென்றது. நேற்று இரவு 9 .20 மணியளவில் விக்கிரவாண்டி டோல் பிளாசாவை கடக்க முயன்ற போது சுங்கவரி செலுத்தாததால் விழுப்புரம் நோக்கி செல்லவிடாமல் அந்தபஸ் நிறுத்தப்பட்டது. பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து மாற்று பஸ்சில் செல்ல முடியாமல் தவித்தனர்.

மேலும் பஸ்சில் வந்த பயணிகள் விழுப்புரம் ெரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டம் நோக்கி செல்லும் ெரயிலை பிடிக்க வேண்டும் என கூறி டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு இரவு 10.05 மணிக்கு விழுப்புரம் நோக்கி சென்ற வேறு அரசு பஸ்சில் பயணிகள் ஏறி சென்றனர்.இதனால் டோல் பிளாசா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News