உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றில் மூழ்கி மாணவிகள் உயிரிழப்பு- உறவினர்கள் சாலை மறியல்

Published On 2023-02-15 19:26 IST   |   Update On 2023-02-15 19:26:00 IST
  • மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள், தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் இன்று காலையில், கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தபோது, ஆற்றின் சுழலில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை மீட்டனர்.

உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் வருவதற்கு முன்பாக பிரேத பரிசோதனை முடிக்கபட்டதால் வாங்க மறுத்தனர். புதுக்கோட்டை இலுப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவிகளின் உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் மாணவிகள் இறந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற இரண்டு ஆசிரியர்கள் என 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News