உள்ளூர் செய்திகள்

அய்யலூர் அருகே கெங்கையூர் ஆற்று ஓடை பகுதியில் செயல்பட்டு வரும் மணல் பிளாண்ட்.

வடமதுரை, அய்யலூர் பகுதியில் மணல் கொள்ளையால் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளங்கள்

Published On 2023-01-11 11:19 IST   |   Update On 2023-01-11 11:19:00 IST
  • வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதியில் மணல் பிளாண்ட் அதிக அளவில் உள்ளன. இதில் பெரும்பா லானவை அனும தியின்றி செயல்படுதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • கனிம வள கொள்ளையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதியில் மணல் பிளாண்ட் அதிக அளவில் உள்ளன. இதில் பெரும்பா லானவை அனும தியின்றி செயல்படுதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்குள்ள ஆறு, ஓடை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு மணல் அள்ளப்படுவதால் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் பள்ள த்தில் சிக்கி கால்நடைகள் அடிக்கடி உயிரிழந்து வருகி ன்றன. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு சந்தன வர்த்தினி ஆற்றை கடக்க முயன்ற மாணவன் பள்ள த்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

அதிக அளவில் மணல் அள்ளி தென்னந் ேதாப்பு களில் பதுக்கி வைத்து ள்ளனர். தொடர் மணல் கொள்ளையால் கனிம வளங்கள் கொள்ளை போவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வேடசந்தூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம், அய்யலூர், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட மணல் பிளாண்ட் இயங்கி வருகின்றன. அதிகாரிகள் இந்த பிளாண்ட்களில் ஆய்வு செய்து முறையான அனுமதி பெற்றுள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் கனிம வள கொள்ளையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News