உள்ளூர் செய்திகள்
குப்பை கொட்டிய தகராறு: 3 பேர் மீது வழக்கு
- சத்யா என்பவர் மனோஜ்குமார் வீட்டின் அருகே குப்பைகளை கொட்டினார்.
- 2 பேர் சேர்ந்து மனோஜ்குமாரின் மனைவி நந்தினியை திட்டி தாக்கிடினர்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள கே.என். பேட்டையை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவர்கள் இடையே முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று மணிகண்டன் மனைவி சத்யா என்பவர் மனோஜ்குமார் வீட்டின் அருகே குப்பைகளை கொட்டினார். இதனால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சத்யா மற்றும் 2 பேர் சேர்ந்து மனோஜ்குமாரின் மனைவி நந்தினியை திட்டி தாக்கிடினர். இதனை விலக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த குமுதா, சோனியா, மனோஜ்குமார் ஆகியோரும் தாக்க ப்பட்டனர். இதுகுறித்து திருப்பாதி ரிபுலியூர் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிந்து உள்ளனர்.