உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே வாலிபர்களை தாக்கி செல்போன், உதிரி பாகங்களை திருடிய கும்பல்

Published On 2023-02-02 05:15 GMT   |   Update On 2023-02-02 05:15 GMT
  • வாலிபர்களை கத்தியை காட்டி மிரட்டி தாக்கி செல்போன், உதிரி பாகங்கள் ஆகியவற்றை பறித்து கொண்டனர்.
  • புகாரின்பேரில் போலீசார் 2 பேரை கைது செய்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தேனி:

கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பஞ்சோலை முக்குடில் பகுதிைய சேர்ந்தவர் அருண்திவாகரன்(31). இவர் ராஜாகாட்டில் கண்காணிப்பு காமிரா மற்றும் கணினி கடை வைத்துள்ளார். கோவையில் இருந்து தேனிக்கு தனியார் டிராவல்ஸ் மூலம் வந்த பார்சலை எடுப்பதற்காக தனது நண்பர் சைலத் என்பவருடன் காரில் வந்தார்.

பொருட்களை எடுத்துக்கொண்டு காரில் ஊர்திரும்பி கொண்டிருந்தபோது பழனிசெட்டிபட்டி தனியார் மில் அருகே காரில் முன்பக்க டயர் வெடித்தது. இதனைதொடர்ந்து பஞ்சர்ஒட்டுவதற்காக அப்பகுதியில் சுற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஆட்ேடா டிரைவர் தனக்கு தெரிந்த நண்பர் இருப்பதாக கூறி 2 பேரையும் ஆட்ேடாவில் அழைத்து சென்றுள்ளார்.

திடீரென கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர். அவர்களிடம் இருந்து செல்போன், உதிரி பாகங்கள் ஆகியவற்றை பறித்து கொண்டனர். மேலும் ஏ.டி.எம். மையத்திற்கு அழைத்து சென்றுபணம் எடுத்து தருமாறு மிரட்டினர். அப்போது ஆட்கள் வரவே அவர்களை விட்டுவிட்டு தப்பிஓடிவிட்டனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கவுதம்காம்பீர்(18), கதிரேசன்(19) என தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Tags:    

Similar News