கல்லணை காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த மக்கள்.
வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
- காவிரி ஆற்றில் இருந்த தண்ணீரில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
- நடவு செய்த குறுவை பயிர்களுக்கு இன்னும் 25 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும்.
பூதலூர்:
மேட்டூர் அணையில் நீர் இருப்பு நிலவரம் நாளுக்கு நாள் கவலை அளிப்பதாக உள்ளது.
இன்றுகாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு 40.38டிஎம்சி ஆக இருந்தது.
நீர்வரத்து 2556கன அடி, தண்ணீர் 6503 கன அடிதிறந்து விடப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
வெண்ணாற்றில் 2402 கன அடியும், கல்லணை கால்வாயில் 1011 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வெண்ணாற்றில் 2601 கன அடி திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது மேலும் தண்ணீர் திறப்பு குறைக்கபட்டுள்ளது.
விடுமுறை நாளான நேற்று கல்லணையில் சுற்றுலா பயணிகள் கூடி மிக சிறிய அளவில் காவிரி ஆற்றில் இருந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
காவிரி பாசன பகுதிகளில் பல இடங்களில் குறுவை பயிர் கதிர் வந்து காணப்படுகிறது.
முன்னதாக நடவு செய்த குறுவை இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்யப்படும்.கால்வாய்களில் தண்ணீர் வந்து நடவு செய்த குறுவை பயிர்களுக்கு இன்னும் 25 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும்.
தற்போதயசூழலில் மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீர் குறுவை பயிரை காப்பாற்ற போது மானதாக இருக்காது என்று விவசா யிகள் கருதுகின்றனர்.
குறுவை பயிர் செய்துள்ள பகுதியில் மழை பெய்தால் குறுவை தப்பிக்கும்.
இல்லை என்றால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று முன்னோடி விவசாயகள் தெரிவித்தனர்.