குடிமைப்பொருட்களை கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து தேனி ரெயில் நிலையத்திற்கு வந்த குடிமை பொருட்கள்
- 12 ஆண்டுகளுக்கு பின்பு ரெயில் மூலம் தேனி மாவட்டத்திற்கு குடிமை ப்பொருட்கள் கொண்டுவ ரப்பட்டுள்ளது.
- லாரி களில் குடிமை ப்பொரு ட்களை ஏற்றும் பணிகளில் 120-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் அகல ரெயில் பாதை அமைத்த பிறகு முதன் முறையாக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தெ லுங்கான மாநிலத்திலிருந்து குடிமைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் கிட்டங்கி களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளுக்கு குடிமைப்பொருட்கள் இதுநாள் வரை திண்டுக்கல் மாவ ட்டத்திலிருந்து லாரியின் மூலம் கொண்டு வரப்பட்டது.
தேனி மாவட்டத்தில் அகல ரெயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து, தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட த்திற்கு ஆண்டு ஒன்றிற்கு 8000 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான ஒதுக்கீடு தெலுங்கானா மாநிலம் வாராங்கால் மாவட்டம் சுங்கன்பாத் ரெயில் நிலையத்திலிருந்து 21 பெட்டிகளில் 1326 டன் அரிசி 26,436 மூட்டைகள் ஏற்றிக்கொண்டு தேனி ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
12 ஆண்டுகளுக்கு பின்பு ரெயில் மூலம் தேனி மாவட்டத்திற்கு குடிமை ப்பொருட்கள் கொண்டுவ ரப்பட்டுள்ளது. ரெயில் மூலம் கொண்டுவரப்பட்ட குடிமை ப்பொருட்களை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், போடி, தேனி ஆகிய 5 நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். லாரி களில் குடிமை ப்பொரு ட்களை ஏற்றும் பணிகளில் 120-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக பொது மேலாளர் (போக்குவரத்து) ஹரிகுமார், தென்னக ரயில்வே துணை வணிக மேலாளர் மணி வண்ணன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.