உள்ளூர் செய்திகள்

சாராயம் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு ஆட்டோவில் நூதன முறையில்சாராயம் கடத்திய 2 பேர் கைது

Published On 2023-10-27 09:14 GMT   |   Update On 2023-10-27 09:14 GMT
  • அப்போது ஆட்டோவில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
  • இருவரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

கடலூர்:

கடலூர் துறைமுகம் போலீஸ் சப் -இன்ஸ்பெ க்டர் தனபால் தலை மையில் ஏட்டு நெப்போலியன், தனிப்பிரிவு சிவஞானம் ஆகியோர் இன்று காலை பச்சையாங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோவில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை முழுமையாக சோதனை செய்தனர் அப்போது ஆட்டோவின் பின்புறம் தகடு இருந்தது.

அதனை அகற்றி பார்த்த பெட்டி போல் அமைக்கப்பட்டு அதில் சாராய பாக்கெட் அடங்கிய மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் புதுவண்டிப்பாளையம் சேர்ந்த பாவாடைராயன் (36) , சரத்குமார் (31) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு சாராயத்தை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். ஷேர் ஆட்டோவிற்குள் சிறிய பெட்டி போல் செய்து அதன் மேல் தகடு அமைத்து நூதன முறையில் சாராயம் கடத்தி சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News