உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகத்தை செஞ்சி யூனியன் தலைவர் விஜயகுமார் வழங்கினார்.

சேரானூர் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்

Published On 2022-06-16 09:31 GMT   |   Update On 2022-06-16 09:31 GMT
  • சேரானூர் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.
  • செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்கினார்

விழுப்புரம்:

 விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி செஞ்சி ஒன்றியம் சிறுணாம்பூண்டி ஊராட்சியை சேர்ந்த சேரானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு ராஜலட்சுமி சேகர் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க கோரி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அங்கு இயங்கும் சத்துணவு மையத்தையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுதா தலைமை ஆசிரியை விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News