உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு இலவச செவிலியர் பயிற்சி

Published On 2023-10-17 13:34 IST   |   Update On 2023-10-17 13:34:00 IST
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது.
  • டி.சி.எஸ் அயன் மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து பைன் எனப்படும் செவிலியர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தேனி:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த வர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் மருத்துவச்சி மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த மாணாக்கர்களுக்கு டி.சி.எஸ் அயன் மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து பைன் எனப்படும் செவிலியர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியினை பெற 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இள ங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் மருத்துவச்சி மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த மாணாக்கர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணா க்கர்கள் விண்ணப்பி க்கலாம்.

மேலும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித்தே ர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முறையானது இணையதளம் வழியாக நடைபெறும். இத்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள் பைன் எனப்படும் செவி லியர் பயிற்சியினை பெறு வார்கள். இப்பயிற்சியானது 2 முறைகளில் நடைபெறும். முதல் 2 வாரங்களில் இணைய வழி கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மருத்துவ மனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும், பயிற்சி கால ங்களில் மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இப்பயிற்சி யினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் முன்னணி மருத்துவ மனைகளில் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை தாட்கோவின் இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி க்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News