உள்ளூர் செய்திகள்
மருத்துவ முகாம் நடந்த போது எடுத்த படம்.
பணகுடி பேரூராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம்
- முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- டாக்டர் ஜோசப் சகாயம் மருத்துவ குழுவினரால் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் நாகர்கோவில் ஜோசப் சகாயம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. முகாமில் பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சகாய புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.டாக்டர் ஜோசப் சகாயம் மருத்துவ குழுவினரால் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது இ.சி.ஜி, ரத்த பரிசோதனைகள் இலவசமாக பரிசோதிக்கப்பட்டது. கவுன்சிலர் முகமது அலீம் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.