உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பொங்கல் பண்டிகைக்காக தாலுகா அலுவலகங்களுக்கு வந்தடைந்த இலவச வேஷ்டி-சேலைகள்

Published On 2022-12-29 10:15 IST   |   Update On 2022-12-29 10:15:00 IST
  • ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
  • 5.60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி-சேலை வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன் கடைகள் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் செயல்பட்டு வரும் ரேசன் கடைகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் நடத்திவரும் 13 ரேசன் கடைகள் என மொத்தம் 1035 ரேசன் கடைகள் உள்ளன.

இந்த ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 6.79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000மும், ஒருகிலோ அரிசி, சர்க்கரையுடன் , ஒரு கரும்பும் வழங்கப்படஉள்ளது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள 5.60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி-சேலை வழங்கப்பட உள்ளது.

இதனால் அந்தந்த வட்டங்களுக்கு தேவையான வேஷ்டி-சேலைகள் தாசில்தார் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து அந்தந்த ரேசன் கடைகளுக்கு வேஷ்டி-சேலைகள் அனுப்பி வைக்கப்படும். பின்னர் ரேசன் கடைகளில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News