ஆலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்
- இலவச சைக்கிள்களை மதியழகன் எம்எல்ஏ., வழங்கினார்.
- 450 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் ஆலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 450 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மதியழகன் எம்எல்ஏ., வழங்கினார். கிருஷ்ணகிரி ஒன்றியம் ஆலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை செரின் வரவேற்புரையாற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., பங்கேற்று, 450 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி, வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலா ளர் கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் கதிரவன், ஒன்றிய செயலா \ளர் தனசேகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சித்ரா சந்திரசேகர், நிர்வாகிகள் அன்பரசன், ஜெயேந்திரன், சென்றாயன், கலையரசன், டாக்டர்.திருவளவன், சாம்ராசு, மாதேஸ்வரன், பொன்னு கான், வீராசாமி, சீனிவாசன், தங்கராஜ், ராஜசேகரன், சவுகத்அலி, சங்கர் மற்றும் பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.