உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நடந்தது.

நாலுவேதபதி ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

Published On 2023-01-05 09:04 GMT   |   Update On 2023-01-05 09:04 GMT
  • நாலுவேதபதி ஊராட்சியில் ரூ. 44 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
  • தலைஞாயிறு மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் அடிக்கல் நாட்டினார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி ஊராட்சியில் ரூ. 44 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் தலைஞாயிறு மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் அடிக்கல் நாட்டினார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபஸ்டி அம்மாள், அண்ணாதுரை, ஒன்றிய பொறியாளர்கள் கோவிந்தராஜ், ரசுகுமாரன், ஒன்றிய மேற்பார்வையாளர் தர்மராஜன், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க இயக்குனர் மச்சழகன், வழக்கறிஞர் ஜெய்சங்கர், தி.மு.க.மாவட்ட பிரதிநிதி வீரகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News