உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பெரியகுளம் அருகே வெள்ளகவி வனப்பகுதியில் காட்டுத்தீ

Published On 2023-03-14 11:22 IST   |   Update On 2023-03-14 11:22:00 IST
  • பெரியகுளம் அருகே வெள்ளகவி வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது.
  • தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பெரியகுளம்:

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் கும்பக்கரை மேல் உள்ள வெள்ளகவி வனப்பகுதியில் நேற்று மாலை முதல் சிறிய அளவில் பற்றிய காட்டு தீயானது காற்றின் வேகம் அதிகமானதால் மளமளவென பற்றி எரிய தொடங்கியது.

இந்த காட்டுத் தீ 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான இடங்களில் பரவியதால் வனப்பகுதியில் இருந்த அறியவகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்து வருகிறது. மேலும் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் வன உயிரினங்கள் பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே தீயை கட்டுப்படுத்துவது குறித்து பெரியகுளம் வனச்சரக அதிகாரியிடம் கேட்டபோது காவலர்கள் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் என 20 நபர்களை கொண்டு தொடர்ந்து காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. இரவு நேரம் மற்றும் உயரமான மலைப்பாதை என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News