உள்ளூர் செய்திகள்

சிறுத்தை புலி தாக்கி இறந்த கால்நடைகளுக்கு வனத்துறையினர் நிவாரணத் தொகை வழங்கல்

Published On 2023-02-17 07:18 GMT   |   Update On 2023-02-17 07:18 GMT
  • பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர், செஞ்சு டையாம்பாளையம், ரங்கநாதபுரம், வெள்ளா ளபாளையம் மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுகள், மயில்கள் மற்றும் நாய்களை சிறுத்தைப் புலி தாக்கி கொன்றது.
  • வனத்துறை யினர் சார்பில் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதன்படி, ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் வழங்கினார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர், செஞ்சு டையாம்பாளையம், ரங்கநாதபுரம், வெள்ளா ளபாளையம் மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுகள், மயில்கள் மற்றும் நாய்களை சிறுத்தைப் புலி தாக்கி கொன்றது.

இந்த சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வனவர்கள், மோப்ப நாய், ட்ரோன் கேமரா, கூண்டுகள், மயக்க மருந்து செலுத்தும் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இதுவரை சிறுத்தை புலியை கண்டு பிடிக்க முடியாத நிலையில், தற்போது சிறுத்தைப்புலி வந்து செல்லும் வழித்தடம் கண்டறியப்பட்டு 15-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள், 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுத்தை புலி தாக்கி பலியான கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தி ருந்தனர். இதையடுத்து, வனத்துறை யினர் சார்பில் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதன்படி, ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பிரவின்குமார் வழங்கினார்.

Tags:    

Similar News