திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலாளர் டாக்டர் சந்தோஷ், இயக்குனர் உஷா சந்தோஷ், பள்ளியின் முதல்வர் ஹரிநாத் ஆகியோர் பாராட்டினார்கள்.
மாணவர்களுக்கு தங்க நாணயங்கள் பரிசு
- மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி தங்க நாணயங்களை வழங்கி சிறப்பித்தார்.
- பள்ளியின் முதல்வர் ஹரிநாத் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி தங்க நாணயங்களை வழங்கி சிறப்பித்தார்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளான ஜீவன், ஹர்ஷிதா, லத்திகாஸ்ரீ, தீபக், யாஷிகா, தர்ஷினி, மோகன்ராம் ஆகிய மாணவ, மாணவிகள் திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தங்க நாணயங்களை பரிசாக பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலாளர் டாக்டர் சந்தோஷ், இயக்குனர் உஷா சந்தோஷ், பள்ளியின் முதல்வர் ஹரிநாத் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.