உள்ளூர் செய்திகள்

மாணவ மாணவிகள் தர்ணா.

கெட்டுப்போன உணவை வழங்கியதால் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் தர்ணா

Published On 2022-07-14 09:34 GMT   |   Update On 2022-07-14 09:48 GMT
  • மாணவ மாணவிகள் கல்லூரி விடுதியில் புரோட்டா சாப்பிட்டு உள்ளனர். அப்போது உணவு கெட்டுப் போயிருப்பதை அறிந்த மாணவர்கள், அது குறித்து உணவு சமைப்பவர்களிடம் கேட்டுள்ளனர்.
  • தரமான உணவு வழங்கிடவும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கையில் பதாதைகளை ஏந்தியவாறு இரவு முதல் சாப்பிடாமல் இருந்து வந்த நிலையில் கோஷமிட்டனர்.

வல்லம்:

தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளம்பக்குடி அருகே தனியார் வேளாண்மை கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு நான்கு ஆண்டு வேளாண்மை படிப்பில் 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர் அதில் 450 மாணவ- மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மாணவ மாணவிகள் கல்லூரி விடுதியில் புரோட்டா சாப்பிட்டு உள்ளனர். அப்போது உணவு கெட்டுப் போயிருப்பதை அறிந்த மாணவர்கள், அது குறித்து உணவு சமைப்பவர்களிடம் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் உணவகத்தின் உள்ளே சென்று பார்த்த போது பழைய மீதமான உணவுகள், கெட்டு போன உணவுகள் ப்ரீஸர் பாக்ஸில் நாள் கணக்கில் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை கண்டித்து நேற்று முன் தினம் இரவு மாணவர்கள் கல்லூரி விடுதியில் சாப்பிடாமல் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை கல்லூரி நுழைவாயில் முன்பே 500க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரமான உணவு வழங்கிடவும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கையில் பதாதைகளை ஏந்தியவாறு இரவு முதல் சாப்பிடாமல் இருந்து வந்த நிலையில் கோஷமிட்டனர். இதில் முதலாம் ஆண்டு மாணவி பசி மயக்கத்தில் மயக்கம் அடைந்தார்.உடனே சக மாணவிகள் அவருக்கு முதலுதவி செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பூதலூரா வட்டாசியர் பிரேமா, தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சித்ரா. மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கல்லூரிக்கு, இன்ஸ்பெக்டர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கல்லூரி விடுதி மற்றும் கேணாடினில் தரமற்ற கெட்டு போன உணவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.உணவு பாதுகாப்புஅதிகா ரிகள் கெட்டுபோன உணவுகளை சோதனை க்காக கொண்டு சென்று ள்ளனர்.

அதே போல் உரிய தர சான்றிதழ் இன்றி மாணழர்களுக்கு‌ உணவு தயாரித்து தந்து வந்ததும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரி விடுதியில் உள்ள மெஸ் மற்றும் கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனையடுத்து மாணவ- மாணவிகளுடன் அதிகா ரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பிறகு மாணவ- மாணவிகள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை சாப்பிடாமல் இருந்து வந்த மாணவ மாணவிகளுக்கு வெளியில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது.

Tags:    

Similar News