உள்ளூர் செய்திகள்

ஓசூரில் ஏழைப்பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-04-17 15:24 IST   |   Update On 2023-04-17 15:24:00 IST
  • ஓசூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
  • ஓசூர் அந்திவாடியில் நடைபெற்ற விழாவிற்கு, மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்ட ஆதி திராவிடர் நல சங்கம் சார்பில், ஓசூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஓசூர் அந்திவாடியில் நடைபெற்ற விழாவிற்கு, மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவி சரோஜம்மா முன்னிலை வகித்தார்.

இதில், சங்க நிறுவனர் அன்பு தீபன், சங்கத்தின் மாநில தலைவரும், ஓய்வுபெற்ற ரெயில்வேத்துறை அதிகாரியுமான டாக்டர் ராஜா, மாநில இளைஞரணி செயலாளர் ராஜா, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநகராட்சி கவுன்சிலர் பாக்யலட்சுமி உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.

விழாவின் போது ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் மற்றும் சிறுவர்,சிறுமியருக்கு நோட்டு புத்தகம், பேனா, டிபன் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும் இதில், லலிதா, லட்சுமி, பவ்யா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்து அந்திவாடி மைதான அருகிலிருந்து விழா நடைபெறும் மைதானம் வரை, மேள, தாள முழக்கத்துடன் ஊர்வலம் நடைபெற்றது.

Tags:    

Similar News