உள்ளூர் செய்திகள்

மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: இந்திய கப்பல் படையை கண்டித்து பரபரப்பு சுவரொட்டி

Published On 2022-10-25 07:21 GMT   |   Update On 2022-10-25 07:21 GMT
  • கப்பல் படையினர், படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
  • 9 மீனவர்களை இந்திய கப்பல் படையினர் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயமடைந்தனர்.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில், வழக்கம் போல், கடந்த சில தினங்களுக்கு முன், 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த இந்திய கப்பல் படையினர், படகை நிறுத்துமாறு எச் சரிக்கை விடுத்ததாகவும், நிறுத்தாத காரணத்தால், கப்பலில் இருந்த வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வீரவேல் என்கின்ற மீனவர் குண்டு காய ங்களுடன் மதுரை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படகில் இருந்த 9 மீனவர்களை இந்திய கப்பல் படையினர் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயமடைந்து நாகை மருத்துவகல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இந்திய கப்பல் படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சார்பில், காரைக்கால் துறைமுகம், காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீனவர்கள் சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News