பைனான்ஸ் உரிமையாளர் சிறையில் அடைப்பு
- 2018-ம் ஆண்டு ஆறுமுகத்திற்கு ரூ.1.80 லட்சம் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது.
- மணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் செங்கழுநீர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சதீஸ்குமார் (வயது30). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எ.ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மணி கடந்த 2018-ம் ஆண்டு ஆறுமுகத்திற்கு ரூ.1.80 லட்சம் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ராணுவத்தில் பணியாற்றிய வந்து சதீஷ்குமார் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது கடனை கேட்டு மணி கடன் வழங்கி–யதற்கு எந்த ஆவணமும் பெறாமல் நம்பிக்கையின் பெயரில் கொடுத்ததாகவும், பணத்தை தராமல் ராணுவ வீரர் இழுத்தடிப்பதாகவும் அதனால் அதற்கான ஆதாரமாக ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சதீஸ்–குமார் வீட்டில் இல்லாத பொழுது மணி அவரது வீட்டில் இருந்த கைப்பையை எடுத்துக் கொண்டு சென்ற–தாக தெரிகிறது. அந்த கைப்பையில் ராணுவ வீரர்க–ளுக்கான அடையாள அட்டை இருந்ததாகவும், அதனை மீட்டு தர வேண்டும் எனக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்–குமார் தாக்கூரிடம் மனு அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் கல்லாவி போலீசார் விசாரணை நடத்தியதில் மணி, ராணுவ வீரர் சதீஸ்–குமாரின் அடையாள அட்டையை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பைனான்ஸ் உரிமையாளர் மணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.