உள்ளூர் செய்திகள்

விவசாயி ஒருவரின் வயலில் வேளாண்மை துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.

வலங்கைமான் வட்டாரத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள் கள ஆய்வு

Published On 2023-04-13 15:46 IST   |   Update On 2023-04-13 15:46:00 IST
  • விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
  • தென்னங்கன்று மற்றும் வேளாண் கருவிகள் ஆகியவை உரிய நபர்களிடம் சேர்ந்துள்ளதா என ஆய்வு.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்ட திட்ட செயல்விளக்கங்களைகள ஆய்வு செய்து உதவி வேளாண்மை அலுவலர்கள் பணியை வேளாண்மை துணை இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் உதவி இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஏரி வேலூர் கிராமத்தில் பருத்தியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்விளக்கம் திடல் ஆகியவற்றை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட விவசாயியிடம் திட்டம் பற்றி விளக்கி ஆலோசனை வழங்கினர்.

அரித்துவாரமங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

மேலும் ஆலங்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும் ஆலங்குடி, நார்தாங்குடி, ஆகிய பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தென்னங்கன்று மற்றும் வேளாண் கருவிகள் ஆகியவை உரிய நபர்களிடம் சேர்ந்துள்ளதா ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது வலங்கைமான் வட்டார வேளாண்மை அலுவலர் சூர்யமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவலிங்கம், சரவணன், சிரஞ்சீவி, சப்தகிரிவசன் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News