உள்ளூர் செய்திகள்
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை படத்தில் காணலாம்.
ஓசூர் பேடரப்பள்ளி அரசு பள்ளியில் சதுரங்கப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு
- பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டது.
- இவர்களை, தலைமை யாசிரியர் பொன். நாகேஷ் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், 11 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ரேகா, மானிஷா ஸ்ரீ ஆகியோரும், ஆண்கள் பிரிவில் இளைய சந்திரன், தர்ஷன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
இதே போல், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் யாழினி, சமிக்க்ஷா, ஆண்கள் பிரிவில் கிஷோர், லோகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களை, தலைமை யாசிரியர் பொன். நாகேஷ் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.