உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே பாஸ்ட்புட் கடை உரிமையாளர் கைது

Published On 2023-09-22 15:36 IST   |   Update On 2023-09-22 15:36:00 IST
  • கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநில தொழிலாளர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
  • நகராட்சி தலைவர் பரிதா நவாப், ஆணையாளர் வசந்தி ஆகியோர் உணவ கத்திற்கு சென்று சீல் வைத்த னர்.

குருபரப்பள்ளி, 

கிருஷ்ணகிரி அருகே பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநில தொழிலாளர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி உள்ள சிப்காட் தொழிற் பூங்கா வில் பிரபல தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வடமா நில தொழிலாளர்கள் 150 பேர், கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் உள்ள சக்தி பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் திடீரென ஒருவர் பின் ஒருவருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த வர்கள் உடனடியாக உடல் நலம் பாதிக்கப்பட்ட 26 பேரையும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக குருபரப் பள்ளி போலீசார், வழக்குப் பதிவு செய்து கடையின் உரிமையாளரான கிருஷ்ண கிரி சமத்துவபு ரத்தை சேர்ந்த சென்னப்பன் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கிருஷ் ணகிரியில் உள்ள அந்த பாஸ்ட்புட் கடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்து, அங்கிருந்த உணவு பொருட்க ளின் மாதிரி சேகரிக்க ப்பட்டு ஆய்வுக் காக சேலத்தில் உள்ள ஆய்வ கத்திற்கு அனுப்பி வைத்தனர். தொட ர்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், ஆணையாளர் வசந்தி ஆகியோர் நேற்று அந்த உணவ கத்திற்கு சென்று சீல் வைத்த னர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் தியேட் டர்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, எச்சரிக்கை விடுத்தனர்.

Similar News