உள்ளூர் செய்திகள்

செம்பேன் மற்றும் மாவு பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு செடிகளை படத்தில் காணலாம்.

மரவள்ளிக்கிழங்கு செடிகளில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை

Published On 2023-07-06 09:05 GMT   |   Update On 2023-07-06 09:05 GMT
  • மரவள்ளி கிழங்கு பயிர்களில் தற்பொழுது செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் செடிகள் காய்ந்து கருகி வருகின்றது.
  • பெருமளவு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் பல ஆயிரம் எக்டேர் அளவிற்கு வருடம் தோறும் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்து வருகின்றனர்.

இந்த மரவள்ளி கிழங்கு பயிர்களில் தற்பொழுது செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் செடிகள் காய்ந்து கருகி வருகின்றது.

இதனால் பெருமளவு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.

குறிப்பாக தருமபுரி மாவட்ட பகுதிகளில் பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் தென்கரை கோட்டை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல 100-க்கும் மேற்பட்ட கிராமத்தில் விவசாயிகள் அதிக அளவாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர்.

பல நேரங்களில் மரவள்ளி பயிரிட்ட விவசாயிகளுக்கு செலவு செய்த பணம் கூட வர முடியாத நிலையில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த பூச்சிகளின் நோய் தாக்குதலால் செடிகள் இலைகள் பழுத்து காய்ந்து உதிர்ந்து வருகிறது.

இதனால் மகசூல் பெருமளவு குறையும் என்று விவசாயிகள் தெரிவித்து பெரும் கவலையடைந்து வருகின்றனர்.

இவற்றை தடுக்க வேளாண்மை துறை அதிகாரிகள் பஞ்சாயத்து பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடுகள் செய்து அவற்றை தடுப்ப தற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News