உள்ளூர் செய்திகள்

கொட்டும் மழையிலும் நடவு பணிகளில் ஈடுபடும் விவசாயகள்.

கொட்டும் மழையிலும் நடவு பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

Published On 2022-11-02 09:21 GMT   |   Update On 2022-11-02 09:21 GMT
  • பாய் நாற்றாங்கால், எந்திர நடவு போன்ற விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம்.
  • கூடுதல் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், புங்கனூர், திருவெண்காடு, கொள்ளிடம், ஆரப்பள்ளம், நல்லூர், வடகால், ஆச்சாள்புரம், கொண்டல், பெருமங்களம், ஆதமங்கலம், வள்ளுவக்குடி, திருப்புன்கூர், கற்கோயில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 22 ஆயிரம் ஹெக்டேர் விலை நிலங்களில் சம்பா சாகுபடி பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 முதல் தொடங்கி மழை பெய்து வரும் நிலையில் மழையில் நனைந்தபடியே பாய் நாற்றாங்கால், நடவு பணி, எந்திர நடவு போன்ற விவசாயப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக சீர்காழி பகுதியில் இயற்கை இடர்பாடுகளால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டது.

மேலும் விதை நெல், டீசல் விலை, உரம் விலை உயர்வு காரணங்களால் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டை விட கூடுதல் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News