உள்ளூர் செய்திகள்

கோரைப்புற்களுடன் வந்து மனு கொடுத்த விவசாய சங்க நிர்வாகிகள்.

கோரைப்புற்களுடன் கலெக்டரிடம் மனு கொடுத்த வந்த விவசாயிகள்

Published On 2022-06-13 09:55 GMT   |   Update On 2022-06-13 09:55 GMT
  • தஞ்சையில் இருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தூர்ந்து போய் அடர்ந்த புதர்கள் மண்டி உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பாலு, ஒன்றிய நிர்வாகி திருநாவுக்கரசு ஆகியோர் புதர்மண்டிய கோரைப் புற்களுடன் வந்து மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தஞ்சையில் இருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த சாலையின் இருபுறங்களிலும் இருந்து வந்த வடிகால் வாய்க்கால் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தூர்ந்து போய் அடர்ந்த புதர்கள் மண்டி உள்ளது.

இதனால் மழைக்கா லங்களில் தண்ணீர் வடிவதில் தேக்கம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோரைப்புற்களுடன் கலெக்டரிடம் மனு கொடுத்த வந்த விவசாயிகள்

Tags:    

Similar News