உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

எழும்பள்ளம் ஏரியை சீரமைக்க அனுமதி மறுப்பு வனத்துறையை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்

Published On 2022-12-02 06:42 GMT   |   Update On 2022-12-02 06:42 GMT
  • விவசாயிகளின் நீராதாரமாக உள்ள எழும்பள்ளம் ஏரியை சீரமைக்கும் உரிமையை தங்களுக்கு வழங்க வேண்டும். அல்லது வனத்துறையினர் ஏரியை சீரமைத்து தர வேண்டும் என கோஷம் எழுப்பினர்
  • எழும்பள்ளம் ஏரியை சீரமைப்பதில் உள்ள பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் முறையிட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் பகுதியில் சூழல் சுற்றுலா மையத்திற்குள் அமைந்துள்ளது எழும்பள்ளம் ஏரி. இந்த ஏரியை இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல வருடங்களாக பராமரித்து வருகின்றனர்.

ஏரியை சீரமைக்க வனத்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஏரியின் வாய்க்காலை சீரமைக்க சூழல் சுற்றுலா மையத்திற்குள் விவசாயிகள் நுழைய முயன்றனர். ஆனால் வனத்துறையினர் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.

மேலும் பணியிலிருந்த அதிகாரி விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டி சூழல் சுற்றுலா மையத்தை முற்றுகையிட்டனர். மன்னவனூர் விவசாயிகளின் நீராதாரமாக உள்ள எழும்பள்ளம் ஏரியை சீரமைக்கும் உரிமையை தங்களுக்கு வழங்க வேண்டும். அல்லது வனத்துறையினர் ஏரியை சீரமைத்து தர வேண்டும் என சூழல் சுற்றுலா மையம் முன்பு குவிந்த விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாவட்ட வன அலுவலரை சந்தித்து வனஅதிகாரி தங்களை தரக்குறைவாக பேசியது குறித்தும், எழும்பள்ளம் ஏரியை சீரமைப்பதில் உள்ள பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் முறையிட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News