உள்ளூர் செய்திகள்

கெட்டுப்பட்டி பகுதியில் நடவு செய்துள்ள மரக்கன்றுகளை வனத்துறையினர் பார்வையிட்ட போது எடுத்த படம்.

மரக்கன்றுகள் நடவு செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும்

Published On 2023-07-16 15:43 IST   |   Update On 2023-07-16 15:43:00 IST
  • விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பயன் பெற வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கபட்டு வருகிறது.
  • விவசாயிகள் தற்போதுள்ள மழைக்கால பருவத்தை பயன்படுத்தி மரக்கன்றுகளை வனத்துறையின் மூலம் நடவு செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில வாரங்களில் பருவ மழையும் தொடங்க உள்ளது.

இதனால் தங்கள் நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வனத்துறையை பயன் படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் தங்கள் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பயன் பெற வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கபட்டு வருகிறது.

நல்லம்பள்ளி ஒன்றியம், டொக்குபோதனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கெட்டுப்பட்டி பகுதியில் முதலமைச்சரின் கனவு திட்டமான பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வனத்துறை மூலம் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை தருமபுரி வனபாதுகாவலர் உத்தரவின் பேரில் வனச்சரகர் ராமச்சந்திரன் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.

மேலும் வனத்துறையின் சார்பில் தருமபுரி மற்றும் தொப்பூர் அலுவலகங்களில் தேக்கு, சில்வர் ஊக், ஈட்டி, நாவல், செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் வனத்துறை சார்பில் தெரிவித்தனர்.

விவசாயிகள் தற்போதுள்ள மழைக்கால பருவத்தை பயன்படுத்தி மரக்கன்றுகளை வனத்துறையின் மூலம் நடவு செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News