உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் சீன காய்கறிகளை பயிரிட ஆர்வம் காட்டும் விவசாயிகள்

Published On 2022-06-30 10:18 GMT   |   Update On 2022-06-30 10:18 GMT
  • தொடர்ந்து விலை இல்லாததால் விவசாயிகளின் பார்வை சீன காய்கறிகளை பயிரிடுவதின் பக்கம் திரும்பியது.
  • இந்த பயிர்கள் விளைய 1 முதல் 50 நாட்கள் தேவைப்படுகிறது. பயிர்கள் விளைந்தவுடன், அவர்களே வந்து வெட்டி விடுவார்கள்.

அரவேணு :

கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை, மசகல், தீனட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

இங்குள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முட்டை கோஸ் பீன்ஸ் அவரை போன்ற மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே மலை காய்கறிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர். தொடர்ந்து விலை இல்லாததால் விவசாயிகளின் பார்வை சீன காய்கறிகளை பயிரிடுவதின் பக்கம் திரும்பியது. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலரும் சீனக்காய்கறிகள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் கோத்தகிரி, கூக்கல்தொரை, மசக்கல், தீனட்டி பகுதிகளில் புருக்கோலி, பாக்சாய், ரோமென், செல்ரி, லீக்ஸ், ஜூகினி பார்சலி போன்ற சீனக்காய்கறிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சீன காய்கறிகளை விளைவிப்பதற்கும், அதற்கு தேவையான மருந்து உள்ளிட்ட இடு பொரு ட்களையும் சீனாவை சேர்ந்த விவசாய நிறுவம் கொடுத்து விடுகிறது. இந்த பயிர்கள் விளைய 1 முதல் 50 நாட்கள் தேவைப்படுகிறது. பயிர்கள் விளைந்தவுடன், அவர்களே வந்து வெட்டி விடுவார்கள். அதற்கான விலையையும் கொடுத்து விடுவார்கள் என்றனர்.

Tags:    

Similar News