உள்ளூர் செய்திகள்
சிப்காட் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் உண்ணாவிரதம்
- விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- விவசாயி களின் உடல்நிலையைச் செவிலியர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்க விளை கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி முதல் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 4-வது நாளாக உண்ணா விரதப் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயி களின் உடல்நிலையைச் செவிலியர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோல, வருவாய்த் துறை அதிகாரி களும் விவசாயிகளை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.