உள்ளூர் செய்திகள்

நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டுவாக்குவாதத்தில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.

பண்ருட்டி அருகே நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

Update: 2022-09-27 08:04 GMT
  • சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
  • நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு அதிகாரிக ள்நோட்டீஸ்கொடுத்தனர்

கடலூர்:

பண்ருட்டி அருகே திருவாமூரில் கன்னியாகுமரி டூசென்னை சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. என்பவருக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஒன்றரைஏக்கர்நிலம் உள்ளது. இந்த நிலத்சாதை சாலை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்த உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு அதிகாரிக ள்நோட்டீஸ்கொடுத்தனர். வேண்டுமென்றே சிலரின் தூண்டுதலின் பேரில் எங்களது நிலம் கையகப்படுத்தப்படுகிறது எனக்கூறி மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையில் அந்தப் பகுதியில் நிலம் கையகப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் சென்றனர். அவர்களை அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நில உரிமையாளர்களுடன் பேச்சி நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டாததால் போலீசார் அங்கு திரண்டு இருந்த விவசாயிகள், பொதுமக்களை விரட்டி அடித்தனர் பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் அங்கு இருந்த மரங்களை வெட்டி சாய்த்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Tags:    

Similar News