உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு வவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம். 

வனப்பகுதியில் ஆடு மேய்க்க பணம் வசூலிக்கும் வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் ஆர்பாட்டம்

Published On 2023-07-04 14:18 IST   |   Update On 2023-07-04 14:18:00 IST
  • வனத்துறையினர் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்க்க கூடாது.
  • அப்படி மேய்த்தால் தினம் ஆயிரம் ரூபாய் வனத்துறைக்கு கட்டி விட்டு தான் ஆடு மாடுகளை மேய்க்க வேண்டும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு வனச்சரகத்தினையொட்டி கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகின்றனர்,

விவசாயத்திற்கு அடுத்தபடியாக, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பினை பெரிதும் நம்பியிருப்பதாக கூறும் கிராம மக்கள், கால காலமாக கால்நடைகளை வனப்பகுதியில் மேய்ப்பதும், வனத்தில் விறகு பொறுக்கவதும், சுண்டைக்காய், நாவல்பழம், சீதாப்பழம், கிழங்கு வகைகளை சேகரி்த்து விற்பனை செய்து வாழ்வாதரம் செய்து வந்ததாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வனத்துறையினர் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்க்க கூடாது எனவும், அப்படி மேய்த்தால் தினம் ஆயிரம் ரூபாய் வனத்துறைக்கு கட்டி விட்டு தான் ஆடு மாடுகளை மேய்க்க வேண்டும் இதே போல் வனப்பகுதிக்குள் காய் கனிகள் பொறுக்கவோ, விறகு பொறுக்கவோ செல்லக்கூடாது என கெடுபிடிகளை கடுமையாக காட்டி வருவதால் தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக கூறும் கிராம மக்கள், வனப்பகுதிக்குள் மீண்டும் கால்நடைகளை மேய்க்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனப்பகுதிக்குள் கால்நடைகளையும் தங்களையும் அனுமதிக்க வேண்டும் வனத்திலிருந்து வெளியே வந்து விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும், யானை, காட்டுபன்றி, மயில், மான் உள்ளிட்ட வன விலங்குகளை விளை நில்ங்களில் புகுந்து சேதப்படுத்துவதை வனத்துறையினர் தடுத்து நிறுத்திடவேண்டும் இல்லையென்றால், வனத்துறையால் பாதிக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் போரட்டம், ஆர்பாட்டங்களில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News