உள்ளூர் செய்திகள்
- அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று மோதியது.
- மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள சிக்கதிம்மன அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 67).
இவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை சென்ற போது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று மோதியது.
இதில் படுகாயம் அடைந்த மாரியப்பனை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.