உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் உழவர் பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-07 14:52 IST   |   Update On 2023-06-07 14:53:00 IST
  • தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகள் வஞ்சிக்கப்படும் நிலைமை இருந்து கொண்டுள்ளது.
  • மாங்கனிகளை விளைவிப்பவர்களே அதற்கான விலையை நிர்ணயிக்கக்கூடிய நிலை தமிழகத்தில் வர வேண்டும்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, மாங்கனி விலையை நிர்ணயம் செய்யக்கோரி, தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வேலுசாமி தலைமை தாங்கினார்.

பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் இளங்கோ, ஆறுமுகம், கோவிந்தராஜ், மாவட்டத் தலைவர்கள் தியாகராஜ்நாயுடு, அண்ணாமலை, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சவுந்தரராஜன், கே.ஆர்.பி., அணை உபரிநீர் நீடிப்பு இடது புற கால்வாய் பயன்பெறுவோர் சங்கத் தலைவர் சிவகுரு, முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் குமார், புல்லட் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் ஆலயமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகள் வஞ்சிக்கப்படும் நிலைமை இருந்து கொண்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதுகெலும்பு தொழிலாக இருந்து கொண்டிருப்பது மா விவசாயம். இது ஒரு வறண்ட மாவட்டம்.

அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் முக்கியத் தொழிலாக விளங்கக்கூடிய இந்த மாங்கனி தொழிலை கண்டு கொள்ளாமல் விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மாங்கனிகளை விளைவிப்பவர்களே அதற்கான விலையை நிர்ணயிக்கக்கூடிய நிலை தமிழகத்தில் வர வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News