உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.

உயர்வுக்கு படி கண்காட்சி கருத்தரங்கு நிகழ்ச்சி

Published On 2023-07-01 09:18 GMT   |   Update On 2023-07-01 09:18 GMT
  • மாணவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டமான உயர்கல்விக்கான விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் நடத்தப்படும்.
  • தற்போதைய தொழில்நுட்பக்காலத்தில் செல்போன்களின் பாதகங்களை தவிர்த்து அதில் உள்ள சாதகமான விஷயங்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூரில் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் உயர்வுக்கு படி எனும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டமான உயர்கல்விக்கான விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் நடத்தப்படும்.

இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்திடவும் செயல்படுத்த ப்பட்டு வருகின்றது.

தற்போதைய தொழில்நுட்பக்காலத்தில் செல்போன்களின் பாதகங்களை தவிர்த்து அதில் உள்ள சாதகமான விஷயங்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இதில் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) கவுரி சங்கர், வட்டாட்சியர் பெருமாள் மற்றும் தொடர்புடைய துறைச் சார்ந்த அலுவலர்கள், ஆசிரியா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News