சாதனை படைத்த பாரத் மாண்டிசோரி மாணவர் சர்வின் தனிஷ்கரைப் பாரத் கல்விக் குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் பாராட்டி சான்றிதழ், கேடயத்தை வழங்கினார்.
நெல்லை அறிவியல் மையத்தில் கட்டுரைப் போட்டி - பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர் சாதனை
- கட்டுரைப் போட்டியில் தென்காசி, நெல்லை மாவட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர் சர்வின் தனிஷ்கர் 2-ம் இடம் பெற்றுச் சாதனை படைத்தார்.
தென்காசி:
நெல்லை அறிவியல் மையத்தில் மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி நடைபெற்றது. தென்காசி, நெல்லை மாவட்ட மாணவ- மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 'அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி' என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கட்டுரைப் போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் சர்வின் தனிஷ்கர் 2-ம் இடம் பெற்றுச் சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவருக்கு மாவட்ட அறிவியல் மையம் சார்பில் சான்றிதழ், வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது. கட்டுரைப் போட்டியில் சாதனை படைத்த மாணவர் சர்வின் தனிஷ்கரைப் பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.