உள்ளூர் செய்திகள்

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

Published On 2022-11-22 14:55 IST   |   Update On 2022-11-22 14:55:00 IST
  • தாளவாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
  • இந்த முகாமில் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தாளவாடி:

தமிழகம் முழுவதும் தற்பொழுது கால் நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கி வருகிறது. அதேபோல தாளவாடி மலைப்பகுதியிலும் கால் நடைகளுக்கு பெரியம்மை தாக்கம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தாளவாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள கல்மண்டி புரம், சோளகர்தொட்டி, எரகணஹள்ள, தமிழ்புரம், மாதஹள்ளி, ஜோராஒசூர், காமையன்புரம், தொட்ட காஜனூர், தர்மாபுரம் மற்றும் பசப்பன்தொட்டி கிராமங்களில் பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்த முகாமில் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News