குளிக்கும் போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்பு
- லாரன்ஸ் பிரேம்குமார் மீண்டும் அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளிக்க சென்றார்.
- இன்று காலை அரக்கன்கோட்டை வாய்க்காலில் லாரன்ஸ் பிரேம்குமார் பிணமாக மீட்கப்பட்டார்.
டி.என்.பாளையம்:
கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள காந்தி நகர் மேட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் லார ன்ஸ் பிரேம்குமார் (40). இவர் கோவையில் கார் பெண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திரு மணமாகி ரீனா என்ற மனைவியும் மற்றும் 2 குழ ந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சத்திய மங்கலம் வடக்கு பேட்டை யில் உள்ள உறவி னர் வீட்டுக்கு லாரன்ஸ் பிரேம்குமார் குடும்பத்துடன் வந்தார். தொடர்ந்து லாரன்ஸ் பிரேம்குமார் மற்றும் அவரது உறவினர்கள் கொடிவேரி அணைக்கு குளிக்க சென்றனர்.
இதை தொடர்ந்து அவர்கள் கொடிவேரி அணைப்பகுதியில் குளித்து விட்டு கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்கால் பகுதி யில் மீன் சாப்பிட்டனர்.
தொடர்ந்து லாரன்ஸ் பிரேம்குமார் மீண்டும் அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளிக்க சென்றார். அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதையடுத்து நீண்ட நேரமாகியும் லாரன்ஸ் பிரேம்குமார் வராததால் அவரது குடும்பத்தினர் கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்காலில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்க வில்லை.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் மற்றும் சத்திய மங்கலம் தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட லாரன்ஸ் பிரேம்குமாரை நேற்று தேடினர்.
ஆனால் அவர் கிடைக்கவில்லை. இரவு நீண்ட நேரம் ஆனதால் அவர்கள் திரும்பி சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் லாரன்ஸ் பிரேம்குமாரை, கொடிவேரி மீனவர்கள் உதவியுடன் சத்தியமங்கலம் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்காலில் தேடினர்.
அப்போது இன்று காலை அரக்கன்கோட்டை வாய்க்காலில் லாரன்ஸ் பிரேம்குமார் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.