உள்ளூர் செய்திகள்

வருங்கால வைப்பு நிதி குறைகேட்பு கூட்டம்

Published On 2023-07-22 12:30 IST   |   Update On 2023-07-22 12:30:00 IST
  • வருங்கால வைப்பு நிதி குறைகேட்பு கூட்டம் நடக்க உள்ளது
  • கூட்டம் வருகிற 27-ந் தேதி திண்டல் மாருதி நகரில் உள்ள வேளாளர் வித்யாலயா பள்ளியில் நடக்கிறது

ஈரோடு,

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் நிதி ஆப்கே நிகட் அதாவது வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற பெயரில் விழிப்புணர்வு மற்றும் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட அளவிலான குறைதீர்ப்புகூட்டம் வருகிற 27-ந் தேதி திண்டல் மாருதி நகரில் உள்ள வேளாளர் வித்யாலயா பள்ளியில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு மண்டல வைப்பு நிதி ஆணையாளர் வீரேஷ் தலைமை தாங்கி பொது மக்களின் குறைகளை கேட்கிறார். இந்த கூட்டத்தில் சந்தாதாரர்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணிவரையும்,தொழில் அதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணிவரையும் நேரில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News