உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மகளுடன் மாயம்

Update: 2022-10-06 09:59 GMT
  • மணி வேலையை முடித்து வீட்டுக்கு வந்தபோது மனைவி மற்றும் மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • இதையடுத்து மணி வெள்ளி திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து மாயமான தனது மனைவி மற்றும் மகளை மீட்டுத் தருமாறு புகார் செய்தார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மாதூர், ஐச்சிமார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி (32). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மணி பெருந்து றையில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் மணி அந்தியூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கால்நடை கடனாக ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார்.அதற்கு மாதம் ரூ.4,565 தவணை செலுத்தி வந்துள்ளார். தவணை காலம் கடந்து கடன் தொகையை செலுத்து வதாகவும், இதற்காக மணி அபராத வட்டி செலுத்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று மணி வேலைக்கு சென்று இருந்தபோது வங்கியின் மேலாளர் மற்றும் பணியாளர் மணி வீட்டுக்கு வந்து அவரது மனைவியிடம் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் இல்லா விட்டால் கையெழுத்து போட்டு கொடுத்து கடனை முடித்து கொள்ள நிர்பந்தம் செய்துள்ளனர்.

இது குறித்து அவரது மனைவி தனது கணவரிடம் போனில் பேசியுள்ளார். அதற்கு மணி நீ கடன் வாங்கியதால் தான் இவ்வளவு பிரச்சனை என்று மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது.

பின்னர் இரவு மணி வேலையை முடித்து வீட்டுக்கு வந்தபோது மனைவி மற்றும் மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் குறித்து தகவல் கிடைக்கவில்லை.

இதையடுத்து மணி வெள்ளி திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து மாயமான தனது மனைவி மற்றும் மகளை மீட்டுத் தருமாறு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News