உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது

Published On 2023-07-20 15:13 IST   |   Update On 2023-07-20 15:13:00 IST
  • பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
  • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சித்தராஜை கைது செய்தனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த எரகனள்ளி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது கல்மண்டிபுரம் குட்டை அருகே ஒரு வாலிபர் பையுடன் நின்று கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் அங்கிருந்து செல்ல முயன்றார்.

பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் கல்மண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த சித்தராஜ் (28) என்பதும்,

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. சுமார் 750 கிராம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சித்தராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News