உள்ளூர் செய்திகள்

சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திறப்பு

Published On 2022-11-10 10:07 GMT   |   Update On 2022-11-10 10:07 GMT
  • சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல்களின் திறப்பு நடைபெற்றது.
  • காணிக்கை எண்ணும் பணி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் முன்னி லையில் நடைபெற்றது

சென்னிமலை:

சென்னிமலை முருகன் கோவிலில் பொதுமக்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்டியல்களின் திறப்பு நடைபெற்றது.

காணிக்கை எண்ணும் பணி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் முன்னி லையில் நடைபெற்றது.

இந்த உண்டியல் திறப்பின் மூலம் ரொக்கமாக ரூ.48,87,159, தங்கம் 153 கிராமும், வெள்ளி 2, 215 கிராமும் இருந்தது. திருப்பணி உண்டியல் திறப்பின் மூலம் ரூ.92,167-ம் வரப்பெற்றது.

மேற்படி உண்டியல் திறப்பில் கோவில் தக்கார் அன்னக்கொடி, செயல் அலுவலர் சரவணன், பெருந்துறை ஆய்வர், கோவில் பணியாளர்கள், பெருந்துறை நந்தா கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் குழுவினர், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News