உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை திட்டப்பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

Published On 2023-03-31 09:28 GMT   |   Update On 2023-03-31 09:28 GMT
  • கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
  • கொரோனா, டெங்கு பரவலை தடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.

ஈரோடு:

ஈரோடு அடுத்த சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட எலவமலை பஞ்சாயத்து சென்னா நாயக்கனார் பகுதியில் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களிடம் புகையிலை மற்றும் கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தது.

புகையிலை பயன்பா ட்டின் தீமைகள், புற்று நோய் பாதிப்பு, புகையிலை தடுப்பு சட்டங்கள், போதை பழக்கத்தால் ஏற்படும் சீரழிவுகள், கோடை வெப்ப தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்,

மாரடைப்பு நோய் பிரச்சனை மற்றும் பாதுகாப்பு முறைகள், கோடை கால உணவு முறை, கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பயன் பெற யோசனை தெரிவித்தனர். தற்போதைய நிலையில் கொரோனா, டெங்கு பரவலை தடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.

ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு நல ஆலோசகர் டாக்டர்.கலைச்செல்வி,

சமூக சேவகர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் மூர்த்தி, குமார், ராஜா ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News