உள்ளூர் செய்திகள்

அளவுக்கு அதிகமாக மது குடித்த வாலிபர் சாவு

Update: 2022-09-27 07:47 GMT
  • கள்ளியம்புதூர் பகுதியை சேர்ந்தவர் தீரன்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து படுத்து உள்ளார்.
  • உடனடியாக தீரன்குமாரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் தீரன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் கள்ளியம்புதூர் பகுதியை சேர்ந்தவர் தீரன்குமார் (வயது 23). ஒரு தனியார் எண்ணெய் மில்லில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக குடிப்பழ க்கத்திற்கு அடிமையான தீரன்குமார் சரியாக சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று சாப்பிடாமல் மாலை அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து படுத்து உள்ளார். பின்னர் காலை 8 மணி ஆகியும் அவர் எழுந்திரு க்கவில்லை.

அவரது தந்தை எழுப்பி பார்த்தபோது மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக தீரன்குமாரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் தீரன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News