உள்ளூர் செய்திகள்

கைத்தறி ரகத்தினை விசைத்தறியில் நெசவு செய்தவர் மீது வழக்கு பதிவு

Published On 2022-11-10 09:55 GMT   |   Update On 2022-11-10 09:55 GMT
  • விசைத்தறி கூடத்தில் ஈரோடு மாவட்ட கைத்தறி ரக ஒதுக்கீட்டு அமலாக்க துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
  • இது குறித்து குழந்தைவேல் மீது தகுந்த ஆதாரங்களுடன் ஜெயவேல் கணேசன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

சென்னிமலை:

சென்னிமலை அருகே சிறுக்களஞ்சி ஊராட்சி, கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி (45). இவர் விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார்.

இவரது விசைத்தறி கூடத்தில் ஈரோடு மாவட்ட கைத்தறி ரக ஒதுக்கீட்டு அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஜெயவேல் கணேசன் தலமையில் அமலாக்க துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது குழந்தைசாமிக்கு சொந்தமான 2 விசைத்தறிகளில் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட டாபி டிசைனுடன் கூடிய காட்டன் பெட்ஷீட் ரகத்தை உற்பத்தி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து குழந்தைவேல் மீது தகுந்த ஆதாரங்களுடன் ஜெயவேல் கணேசன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னிமலை பகுதியில் இது போன்று பல விசைத்தறி கூடங்களில் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகத்தினை உற்பத்தி செய்வதாக தொடர் புகார் வந்துள்ளது.

அதனால் இது போன்று தொடர்ந்து தீடீர் சோதனை நடத்தப்படும் என்றும், இது போன்று கைத்தறி ரகத்தினை விசைத்தறியில் உற்பத்தி செய்து அதை விற்பனைக்காக வாங்கி வைத்திருப்பதும் சட்டபடி குற்றம் என அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News